சிறைச்சாலையில் கஞ்சிபானை இம்ரானைப் பார்க்கச் சென்றிருந்த வேளையில், இரு கைத்தொலைபேசிகளை உணவுப் பொதியில் மறைத்து வைத்துக் கொண்டு சென்றிருந்த நிலையில் கைதான குறித்த நபரின் தந்தை மற்றும் சகோதரனுக்கு இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மாகந்துரே மதுஷோடு கைதான கஞ்சிபானை இம்ரான், தொடர்ந்தும் செய்திகளில் இடம்பிடித்து வரும் நிலையில் தற்போது தந்தையும் சகோதரனும் இவ்வாறு கைத்தொலைபேசிகளை வழங்கி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டிய விவகாரத்திலும் கஞ்சிபானை இம்ரானுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment