முல்லைத்தீவில் பிக்குகளின் அடாவடித்தனம் தொடர்பில் தனது கடமையைத் தான் செய்து முடித்து விட்டதாக தெரிவிக்கிறார் மனோ கணேசன்.
இவ்விடயத்தில் கொழும்பிலிருந்து தனது 'பணிச்'சுமைக்கு மத்தியிலும் தன்னால் இயன்றதைத் தான் செய்து விட்டதாகவும் அதற்கு மேல் அது அப்பகுயில் உள்ள சட்டத்தரணிகளின் பொறுப்பிலேயே இருப்பதாகவும் மனோ மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமே தன்னைத் தொடர்பு கொள்ளாதது ஆச்சரியமாக இருப்பதாகவும் மனோ தெரிவிப்பதுடன் தனது பங்கிற்கு இவ்விவகாரம் தொடர்பில் தான் சில தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டிருந்ததாக விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment