சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் இன்று (3)அதிகாலை (6.30) மணியளவில் யானைகள் பொதுமக்களின் வசிக்கும் பகுதிககளுக்குள் நுழைந்து வீடுகள் உடமைகளை சேதப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானைகள் திடீரென நுழைந்து சுவர்களை உடைத்துள்ளன. மேலும் சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் வசிக்கும் ஏ.அமீர் என்ற நபர் மீது யானை தாக்குதலை நடாத்தி வீட்டின் உடமைகளுக்கு சேதப்படுத்தியுள்ளதுடன் குறித்த நபரும் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சம்மாந்துரை மஸ்ஜிதுல் சலாம் ஜும்மா பள்ளிவாசல் மதிலும் சேதமடைந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து வெளியிடுகையில், தாம் தொடர்ந்தும் அச்சத்தில் வாழ்வதாகவும் அவ்வப்போது இவ்வாறு யானைகள் அட்டாகசம் புரிவதாகவும் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
-எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment