கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக விரைவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
முறையான வகையில் குடியுரிமையைப் பெறாத நபர் எனும் அடிப்படையில் அவருக்கு சட்டபூர்வமான கடவுச்சீட்டும் இல்லையென வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக ராஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோட்டாவின் இரட்டைக்குடியுரிமை விவகாரத்தை உறுதி செய்யும் வகையில் இன்று காலையில் இன்னுமொரு வழக்குப் பதிவாகியுள்ளதுடன் அதன் விசாரணை ஒக்டோபர் 2ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment