2005ம் ஆண்டு, அமெரிக்க பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னணியில் உருவாகியுள்ள சர்ச்சையைக் காரணங் காட்டி கோட்டாபே ராஜபக்சவைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன் வைக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் இக்கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
கோட்டாபேவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்ந்தும் சிக்கலுக்குள்ளாகியுள்ள போதிலும் பெரமுனவினர் அவருக்காக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment