
ஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசர கால சட்டத்தின் அடிப்படையிலேயே நிகாப் - புர்கா தடை செய்யப்பட்டிருந்ததாகவும் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதோடு அத்தடையும் நீங்கி விட்டதாகவும் அண்மையில் ஸ்ரீலங்கா பொலிஸ் விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், இதற்கு பெரமுன மற்றும் மனோ கேணசன் தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததன் தொடர்ச்சியில் ஜாதிக ஹெல உறுமயவும் இணைந்துள்ளது.
இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே தமது அதிருப்தியை தெரிவித்துள்ள சம்பிக்கவின் ஹெல உறுமய, அடிப்படைவாதிகளே இவ்வாறான ஆடைத் தெரிவுகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment