கிரிந்தயில் வன்முறையைத் தூண்டியது நானில்லை: காஞ்சன - sonakar.com

Post Top Ad

Saturday, 28 September 2019

கிரிந்தயில் வன்முறையைத் தூண்டியது நானில்லை: காஞ்சன



மாத்தறை, ஹக்மன - கிரிந்தயில் வன்முறையைத் தூண்டிவிட்டதாக தனது 'நற்பெயருக்கு' களங்கம் விளைவிக்கப்படுவதாகவும் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனவும் பொலிசில் முறையிட்டுள்ளார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர.



பிரதேசத்தில் இடம்பெற்ற தனி நபர் பிரச்சினையொன்றைப் பயன்படுத்தி, அப்பகுதியில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைக் கொண்டாடியதையடுத்து நேற்றைய தினம் வன்முறைத் தூண்டல் இடம்பெற்றதாகவும் அதன் பின்னணியில் காஞ்சனவே இருப்பதாகவும் பிரதேசத்தில் பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலேயே காஞ்சன இவ்வாறு தன் நிலை விளக்கமளித்துள்ள அதேவேளை முஸ்லிம் வீடுகள் சிலவற்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டு, பெருந்தொகையான வன்முறையாளர்களும் அங்கு கூடியதால் நேற்றிரவு இன வன்முறைப் பதற்றம் நிலவியிருந்தமையும், தொடர்ந்தும் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment