மாத்தறை, ஹக்மன - கிரிந்த பகுதியில் நேற்றிலிருந்து நிலவிய சிறு சர்ச்சை காரணமாக பிரதேசத்தில் சிறு பதற்றம் நிலவியுள்ளது.
நேற்றைய தினம் விகாரையொன்றருகே மூண்ட சர்ச்சையின் பின்னணியில் அரசியல் கருத்து வேறுபாடுள்ளவர்களினால் இன்று அப்பகுதயில் பதற்றம் நிலவியுள்ளதுடன் மூன்று முதல் நான்கு முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன முறுகல் பதற்றம் உருவான போதிலும் தற்சமயம் சுமுக சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment