கட்சியை விட்டு விலகியிருப்பவர்கள் மீண்டும் தம்மோடு இணைந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க.
நீண்டகாலம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திடீரென மஹிந்த ராஜபக்ச அணிக்குத் தாவி 20 நாட்கள் அமைச்சராகவும் இருந்ததுடன் போலி கையொப்ப மோசடி வழக்கிலும் சிக்கியிருந்த நிலையில் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தார்.
எனினும், அதற்கு முன்பாக ரணில் - சஜித் இணக்கப்பாடு எட்டப்படுவதில் திஸ்ஸ பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்நிலையிலேயே நேற்றைய தினம் திஸ்ஸவுக்கு சஜித் பிரத்யேகமான அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திஸ்ஸ, தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment