2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதை இரத்துச் செய்து அவரை அத்தினத்திலிருந்து தொடர்ந்தும் லெப்டினன்ட் பதவியில் நீடிப்பதாக இணைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இதற்கமைவாக நேற்று அதற்கான உத்தரவைப் பெற்ற கடற்படைத் தளபதி பியல் டி சில்வா உடனடியாக யோஷிதவை மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி நிதி முறைகேட்டின் பின்னணியில் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவின் வேண்டுகோளின் பேரிலேயே யோஷித இடை நிறுத்தப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment