பெண் வேடமிட்டு அக்மீமன பிரதேசத்துக்குள் சென்று வீடொன்றில் நபர் ஒருவர் பற்றி தகவல் சேகரித்த வெலிகமயைச் சேர்ந்த 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அழகு நிலையம் ஒன்றுக்குச் சென்று 800 ரூபா செலவு செய்து தன்னைப் பெண் போல் அழகுபடுத்திக்கொண்டுள்ள நபர், அக்மீமன - குருந்துவத்த பகுதி வீடொன்றுக்கு சென்று அங்கு ஒருவர் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததாகவும் அவ்வேளையில் காற்றின் காரணமாக இந்நபர் அணிந்திருந்த 'விக்' கழன்று விழுந்த நிலையில் ஆண் என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஊர் மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டுள்ள குறித்த நபர், அப்பகுதியில் தனக்கிருந்த முறைகேடான தொடர்பொன்றின் நிமித்தமே அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment