நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு தாம் எப்போதும் பூரண ஒத்துழைப்பும் சம்மதமும் வெளியிட்டு வந்த போதிலும் அதனை தனது பதவிக் காலத்துக்குள் செய்து முடிக்காததன் பொறுப்பை நாடாளுமன்றமே ஏற்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர், காலம் கடந்து அதனை இப்போது செய்ய நினைப்பது கேலிக்கூத்து எனவும் விபரித்துள்ள அவர், தான் தனது நிலைப்பாட்டில் ஒரு போதும் மாறவில்லையென தெரிவிக்கிறார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதன் ஒரு கட்டமாக 19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் தேர்தல் வாக்குறுதி முழுமையடையவில்லையென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment