நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பேச கடந்த வியாழனன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு தான் மட்டுமே பொறுப்பாளியில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நான் ஏனையோடு சேர்ந்தே பல முடிவுகளை எடுக்கிறேன், அரசியலில் ஈடுபட்டு வருகிறேன், ஆனால் ஈற்றில் என்னை மாத்திரமே எல்லாவற்றிலும் குற்றவாளியாக்குகிறார்கள் என தெரிவிக்கிறார்.
திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரவைக் கூட்டம் தீர்வின்றி முடிவுற்றதோடு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஒரு முயற்சி இடம்பெற்றமை குறித்து பல முனைகளிலிருந்து விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment