முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் , அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி கல்முனை நீதிமன்ற சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை(24) காலை சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் கல்முனை நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
நீதிமன்ற வளாக முன்றலில் ஒன்று கூடிய சட்டத்தரணிகள் திங்கட்கிழமை (23) முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள் , அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை , நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் , நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமை காரணமாக அவ்விடத்திற்கு சென்ற சட்டத்தரணிகள் , தமிழ் மக்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment