ஹக்மன - கிரிந்த பகுதியில் இடம்பெற்ற இன வன்முறை சம்பவத்தின் போது கடமையைச் செய்யத் தவறியதாக ஹக்மன பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் சில பொலிசாருக்கு எதிராக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனி நபர் பிரச்சினையை அப்பகுதியின் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இன வன்முறையாக மாற்றியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ள அதேவேளை அதனை எதிர்த்து காஞ்சன பொலிசில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment