மைத்ரி சீனாவை அவமதித்து விட்டார்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 September 2019

மைத்ரி சீனாவை அவமதித்து விட்டார்: மஹிந்த!


தாமரைக் கோபுரம் திறப்பு விழாவின் போது 200 கோடி ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டு, உற்ற நண்பனான சீனாவை மைத்ரிபால சிறிசேன அவமதித்து விட்டதாக விசனம் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.


சர்ச்சைக்குரிய 200 கோடி ரூபா முற்பணம் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லையெனவும் ஆரம்பம் தொட்டே குறித்த திட்டத்தின் பொறுப்பாளிகளான China National Electronics Corporation நிறுவனத்துக்கே கொடுப்பனவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்ற அவர், குறித்த இரு நிறுவனங்களுமே 100 வீதம் சீன அரசினால் இயக்கப்படுபவை எனும் அடிப்படையில் சீன அரசாங்கமே முற்பணத்தையும் பெற்றுக்கொண்டது எனவும் விளக்கமளித்துள்ளார்.

தாமரைக் கோபுர நிர்மாண திட்டத்துக்கான இணக்கப்பாட்டு அடிப்படையில் 15 வீத முற்பணத்தை செலுத்த வேண்டியது அரசின் பொறுப்பெனவும் அவர் மேலும் விளக்கியுள்ளார். குறித்த காலப்பகுதியில் தொலைத் தொடர்பு ஆணைக்குழு மஹிந்த ராஜபக்சவின் கீழே இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment