இறுதி நேரத்திலேயே எங்கள் அதிரடி: சந்திரிக்கா! - sonakar.com

Post Top Ad

Monday, 9 September 2019

இறுதி நேரத்திலேயே எங்கள் அதிரடி: சந்திரிக்கா!


2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக 2014 ஆம் ஆண்டின் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம் இடம்பெறும்  ஜனாதிபதித் தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பரபரப்பான தகவல் வெளியிட்டுள்ளார். 



சர்வதேச செய்தி நிறுவனத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் இங்கு  தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் நான் பங்கேற்றியிருந்தேன். அந்தக் கட்சி எனது தாய் வீடு. முதலில், அந்தக் கட்சியிலுள்ள களைகளை அகற்றவேண்டும். அந்தக் கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் தொடர்ந்தும் இருப்பேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இப்போதே முடிவை வெளியிடாது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நேரத்தில் இடம்பெற்றதைப் போன்று, அதிரடியான முடிவை எடுக்கும்  என்றார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment