காரைதீவில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 7 September 2019

காரைதீவில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்பு


குளித்த பின் தனது  வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய  பாடசாலை மாணவியொருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை(7) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது-

பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி திடீரென எரிந்த நிலையில்  சடலமாக தரையில் வீழ்ந்த நிலையில்அலறியுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கதிர்காமத்தம்பி வீதி  நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17)  என்பவர் ஆவார்.சம்பவம் இடம்பெற்ற வேளை தாய் தந்தை எவரும் வீட்டில் இருக்கவில்லை.குறித்த மாணவியின் சகோதரர்  மாத்திரமே  இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து  அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அத்துடன்   குறித்த நேரத்தில் பரவியிருந்த  தீயினை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாக அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.போ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  சம்மாந்துறை பொலிஸார் மின்னொழுக்கினால் எவ்வாறு தீ பரவியது? கொலையா தற்கொலையா ?என்பது தொடர்பில்   விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-Farook Sihan

No comments:

Post a Comment