பாலமுனை பகுதியிலிருந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சஹ்ரான் குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் அரச உளவுத் தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சோதனை நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
T56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment