ஈஸ்டர் தாக்குதலையடுத்து நிகாப் - புர்கா மற்றும் முழு முகத்தையும் மூடும் வகையிலான ஹெல்மட் அணிதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை சுற்று நிருபம் ஒன்றின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நீக்குவதற்கான நடைமுறை முறையாகப் பின்பற்றப்படவில்லையென தெரிவிக்கிறார் பெரமுன முக்கியஸ்தர் திலும் அமுனுகம.
அவசரகால சட்டம் நீங்கியதற்காக நிகாப் தடையை நீக்குவது தேவையற்றது எனவும் அவ்வாறான ஒரு கட்டாயம் தேர்தல் இலாபம் கருதியே அரசினால் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவசர கால மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் கீழ் குறித்த தடை உருவாக்கப்பட்டிருந்ததாக முன்னர் தெளிவற்ற நிலை இருந்த போதிலும் அண்மையில் பொலிஸ் தலைமையகம் அமைச்சர் ஹலீமுக்கு அனுப்பி வைத்திருந்த பதில் கடிதத்தில் உத்தியோகபூர்வமாக தடை நீங்கியுள்ளதாக விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment