முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் இறந்த பௌத்த தேரர் ஒருவரின் உடலத்தை புதைத்து சமாதியெழுப்ப மேற்கொண்ட முயற்சியால் பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
இந்நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஊடாக இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ள நீதிமன்றம், தேரரின் உடலை செம்மலை இராணுவ முகாமுக்கு அருகில் தகனம் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்னதுடன் நினைவுத்தூபி அமைக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், சர்ச்சைக்குரிய இடத்திலேயே உடலத்தை தகனம் செய்வதற்கு பிக்குகள் தரப்பு முயற்சித்த நிலையில் பொலிசார் வரவழைக்கப்பட்டு சிறிது நேரம் பதற்றம் நிலவியிருந்தது.
மேதாலங்கார கீர்த்தி தேரர், புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment