அரசியல் சூழ்நிலை ஒத்து வராவிட்டால் தான் ஒதுங்கி விடப் போவதாக தெரிவித்த விஜேதாச ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அக்கட்சி மற்றும் வேறும் அமைப்புகளுடனான கூட்டணியூடாகவே இவ்வாறு விஜேதாசவை வேட்பாளராக்கும் முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ள போதிலும் தொடர்ந்தும் மஹிந்த அணியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment