தான் வேறு ஒரு தொலைக்காட்சி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியின் (தமக்குத் தேவையான) ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து தமக்கே வழங்கிய செவ்வியென லங்காதீபவும் - டெய்லி மிரரும் பொய் செய்திகளை வெளியிட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா.
கோட்டாபே ராஜபக்ச சஜித்துக்கு போட்டியாக இருப்பார் என்றாலும் ஈற்றில் சஜித் பிரேமதாசவே வெல்வார் என தான் வழங்கியிருந்த செவ்வியினை திரிபு படுத்தியே இவ்வாறு குறித்த ஊடகக் குழுமம் தகவல் வெளியிட்டிருப்பதாக ஹர்ஷ தெரிவிக்கிறார்.
இனவாத காலங்களிலும், முண்டியடித்துக் கொண்டு பல்வேறு பொய்த் தகவல்களை ஊதிப் பெருப்பிப்பதில் திவயினைக்கு அடுத்த இடத்தில் லங்காதீப செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment