வாக்காளர் பதிவுக்கு தான் புதிய அடையாள அட்டையையே படிவத்தில் நிரப்பிய போதிலும் தேர்தல் செயலாமே தவறாக பதிந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார் கோட்டாபே ராஜபக்ச.
தனது புதிய அடையாள அட்டை இலக்கத்தையே படிவத்தில் நிரப்பிய அதேவேளை அடைப்புக்குறிக்குள்ளேயே தான் 2016ல் இரத்துச் செய்யப்பட்டிருநத பழைய அடையாள அட்டை இலக்கத்தையும் எழுதியிருந்ததாகவும் தேர்தல் செயலகம் அதனைறே உபயோகித்திருப்பதாகவும் கோட்டாபே விளக்கமளித்துள்ளார்.
இரட்டைக்குடியுரிமையுள்ள கோட்டாபே இரத்துச் செய்யப்பட்டிருந்த அடையாள அட்டை இலக்கத்தினை உபயோகித்து வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக வெளியான குற்றச்சாட்டுக்கே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment