தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்களுக்கு தமது கட்சி ஒரு போதும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கப் போவதில்லையென முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பலர் மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகியிருந்தனர். ஜே.வி.பி தரப்பிலும் இவ்வாறு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்காலத்தில் தமது கட்சி அவ்வாறு வாய்ப்பளிக்கப் போவதில்லையென பெரமுன தெரிவிக்கின்ற அதேவேளை அக்கட்சியின் தேசியப் பட்டியல் நியமனத்தை நம்பிப் பலர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment