ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவரான சஜித் பிரேமதாச அக்கட்சிக்கு 2001ல் இருந்த வாக்கு வங்கியைக் கூட காப்பாற்ற முடியாமல் சரிய விட்டவர் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
2001ம் ஆண்டு அவர் பொறுப்பேற்கும் போது கட்சிக்கு 40 வீத ஆதரவு இருந்தது. எனினும் 2010ல் அது 30 வீதமாக குறைந்தேயுள்ளது என புள்ளிவிபரம் தெரிவிக்கின்ற அவர் இப்பேற்பட்ட தலைவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என தெரிவிக்கிறார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கு கோட்டாபே அவசியமில்லையெனவும் சாதாரண பிரதேச சபை தலைவர் ஒருவர் எதிர்த்து நின்றாலும் சஜித் தோல்வியடைவார் எனவும் கம்மன்பில மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment