பூசா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் கஞ்சிபானை இம்ரானை பார்வையிடச் சென்ற வேளையில், உணவுப்பொதிக்குள் வைத்து இரு கைத்தொலைபேசிகளை வழங்கிய குறித்த நபரின் தந்தை மற்றும் சசோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் அதற்கான சார்ஜர்களும் இவ்வாறு மறைத்து வைத்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இச்சந்தர்ப்பத்தில் அங்கு சிறை வைக்கப்பட்டவர்களைப் பார்வையிட வந்த மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ரத்கம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment