தமது கட்சியை வெல்ல வைப்பதை தவிர்ப்பதற்கு ஒரு கட்சித் தலைவர் விரும்பவில்லையென்றால் அவருக்கு எதிர்க்கட்சியுடன் ஏதாவது டீல் இருக்குமா என சந்தேகம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அசோக அபேசிங்க.
கட்சியின் 70 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், 85 வீதமான மாகாண சபை உறுப்பினர்கள், 95 வீதமான உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் மக்களும் விரும்பும் ஒருவரைக் கொண்டு கட்சிக்கு அரசியல் ரீதியான வெற்றியைக் காண்பதில் இத்தனை தயக்கம் இருப்பது சந்தேகத்துக்குரியது எனவும் எதிர்க்கட்சியை வெல்ல வைப்பதற்கான டீல் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் கட்சித் தலைமை தொடர்பில் பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டு வருகின்ற அதேவேளை வேட்பாளர் அறிவிப்பு இந்த வாரத்திலிருந்து அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment