அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டதாகத் தவறான தகவலை வழங்கி இலங்கைக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறி கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஒக்டோபர் 2ம் திகதி இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் சந்திரகுப்தா தேநுவர மற்றும் காமினிய வியங்கொட ஆகிய இருவரால் கொண்டு வரப்பட்டுள்ள இவ்வழக்கின் விசாரணையை மூவர் கொண்ட நீதிபதிகள் குழு விசாரிக்கவுள்ளது.
கோட்டாபே அமெரிக்க குடியுரிமையைக் கை விட முன்னதாகவே இவ்வாறு இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றிருப்பதாகவும் அதனைத் தடை செய்ய வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment