ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படவில்லையென அறியமுடிகிறது.
இந்நிலையில், கட்சி மட்டத்தில் இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனினும், இன்றைய சந்திப்பு தமக்குத் திருப்தியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment