கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமிடத்து கரு ஜயசூரியவே அவரை வெல்லக் கூடிய சிறந்த வேட்பாளர் எனவும் சஜித் பிரேமதாச போட்டியிட்டால் மூன்றாமிடமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறார் முன்னாள் பேராதெனிய சமூக விஞ்ஞான பேராசிரியர் சிசிர பின்னவல.
நாடளாவிய ரீதியில் தான் நடாத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையிலேயே இத்தகவை வெளியிடுவதாக அவர் தெரிவிக்கிறார். எட்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் ஏழு இடங்களில் கரு ஜயசூரிய முன்னணி வகிப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரத்யேகமாக வேட்பாளர் ஒருவரைக் களமிறக்காது எனும் அடிப்படையில் இக்கருத்துக் கணிப்பு அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment