சஜித் பிரேமதாசவுக்கு பரவலான மக்கள் ஆதரவும் எதிர்பார்ப்பும் அதிகரித்த போதிலும், கட்சி மட்டத்தில் தமக்குத் தேவையான நிபந்தனைகளுக்கு உடன்பாடு காணும் வரை சஜித்தை வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வந்த அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்கவே இருக்க வேண்டும் என்பது இவற்றுள் பிரதான நிபந்தனையாகும். இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான ஆவண செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாசவிடம் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அதற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சில சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், கட்சித் தலைமையுடன் இணங்கிச் செல்வதே தெரிவென்பதில் சஜித் பிரேமதாசவும் சில வாரங்களுக்கு முன்பாகவே இணக்கம் கண்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment