அன்னச் சின்னத்தை விரும்பும் சஜித்! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 September 2019

demo-image

அன்னச் சின்னத்தை விரும்பும் சஜித்!

rhlJlS8

கடந்த தடவை மைத்ரிபால சிறிசேன போட்டியிட்ட அன்னச் சின்னத்திலேயே தானும் போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.



நீண்ட இழுபறிக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமாதாச ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை இன்றைய தினம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதி செய்துள்ள நிலையில் சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி அன்னச் சின்னத்தையே தேர்வு செய்திருந்தமையும் நீண்ட காலத்திற்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment