போரா சமூகத்தின் சர்வதேச வருடாந்த மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
செப்டம்பர் 1 முதல் 10ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 21,000 போராக்கள் பங்கேற்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சும் இம்மாநாட்டுக்கு போதிய ஒத்துழைப்பையும் வசதிகளையும் செய்து தந்துள்ளதுடன் போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி செய்புதீனும் இம்மாநாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment