81 வயது மூதாட்டி கொலை: மகன் - மருமகள் - பேரன் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 14 September 2019

81 வயது மூதாட்டி கொலை: மகன் - மருமகள் - பேரன் கைது!



81 வயது மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்த சம்பவத்தின் பின்னணியில் உயிரிழந்தவரின் மகன், மருமகள் மற்றும் மூத்த பேரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வட்டவளயில் இடம்பெற்றுள்ளது.



குடும்பத்தின் 08 வயது குழந்தையின் சாட்சியத்தின் உதவியோடு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மூதாட்டியை அடித்துத் தாக்கி, கொலை செய்து நாற்காலியொன்றில் வைத்துக் கட்டி கிணற்றில் வீசியுள்ளமை தெரியவந்துளளது.

எனினும், இறந்த மூதாட்டியின் இறுதிக் கிரியைகளை செய்யப் பணம் இல்லாததால் அவரை காட்டில் புதைத்ததாக முன்னர் கூறப்பட்டுள்ள அதேவேளை சந்தேகத்தின் பேரில் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளிலேயே உண்மை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment