கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் பிரளயத்தின் போது 61 தடவைகள் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இருந்தும் தான் நிராகரித்ததாகவும் தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
எனினும் தனக்கு பின் கதவால் பதவிளைப் பெறும் தேவையோ ஆசையோ இல்லாததாலேயே இன்று மக்கள் விருப்பத்திற்கிணங்க முன் கதவால் நேருக்கு நேர் நின்று போட்டியிடத் துணிந்திருப்பதாகவும் தலைமை இன்னும் ஏன் மௌனம் காக்கிறது என தனக்குப் புரியவில்லையெனவும் சஜித் மேலும் தெரிவிக்கிறார்.
ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் போதே சஜித் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment