அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உட்பட முக்கிய அபிவிருந்தியடைந்த நாடுகளுக்கு ஒரு வருட சுற்றுலா விசா வழங்குவதற்கு தீர்மானித்து அறிவித்துள்ளது சவுதி அரேபியா.
முஸ்லிமல்லாதோர் மக்கா - மதீனா நகர்களுக்குச் செல்வதற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் ஒவ்வொரு விஜயத்தின் போதும் 90 நாட்கள் தங்கியிருக்கக் கூடிய வகையிலான இலத்திரனியல் விசா வழங்கப்படுவதாகவும் சவுதி அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, சிங்கப்பூர், சீனா மற்றும் மேற்குலக நாடுகளே இணைக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் காலங்களில் மேலும் பல நாடுகளுக்கு இவ்வசதியை உருவாக்கவுள்ளதாக சவுதி தெரிவிக்கிறது.
எண்ணை வள எதிர்காலம் மழுங்கி வரும் நிலையில் சுற்றுலாத்துறை மீது சவுதி அரசு நாட்டம் காட்டுகின்றமையும் மேலை நாட்டுப் பெண்களுக்கு ஆடை விவகாரத்தில் இறுக்கமான சட்டங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment