தபால் மூல வாக்களிப்பு: செப்டெம்பர் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - sonakar.com

Post Top Ad

Sunday, 22 September 2019

தபால் மூல வாக்களிப்பு: செப்டெம்பர் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்



நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகைமை பெற்றவர்களின் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் கால எல்லை 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதி மதியம் 12  மணிக்கு முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.    



அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி, எக்காரணத்தினாலும் நீடிக்கப்படாதென்பதால், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் தகைமையைக் கொண்ட வாக்காளர்கள், உடனடியாக தனது விண்ணப்பங்களை உரிய முறையில் பூரணப்படுத்தி உரிய அத்தாட்சிப்படுத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அத்துடன், குறித்த விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றவுடன், அவற்றை அத்தாட்சிப்படுத்தி உரிய தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்புவதற்கு அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எக்காரணத்தினாலும் 2019 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு நேரிலோ அல்லது அஞ்சல் ஊடாகவோ கிடைக்கப் பெறும் அஞ்சல் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லையென்பதையும், குறித்த விண்ணப்பங்களைத் தாமதமாகக் கிடைத்த விண்ணப்பங்களாகக் கருதி நிராகரிக்க வேண்டியேற்படுமென்பதையும் இத்தால் அறிவிக்கின்றேன் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment