எதிர்வரும் 24ம் திகதி ஜனநாயக தேசிய முன்னணி கூட்டணி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ள நிலையில் சஜித் - கரு ஜயசூரிய இடையிலான தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருகிறது.
இருவருக்கும் கட்சி மட்டத்தில் ஆதரவு இருக்கின்ற அதேவேளை கூட்டணி கட்சிகள் ஏலவே சஜித் தெரிவு செய்யப்பட்டாலும் ஆதரவு வழங்கத் தயார் என தெரிவிக்கின்றமையும் ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காவிட்டாலும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சஜித் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment