இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் முழுமையாக அரசுக்குச் சொந்தமானது எனவும் மக்கள் பணத்திலேயே தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
மஹிந்த ஆட்சிக்காலத்திலேயே குறித்த கோபுரம் திட்டமிடப்பட்ட போதிலும் அதற்கான நிதி சீன எக்சிம் வங்கியிடமிருந்து கடனாகவே பெறப்பட்டிருந்தது. எனினும், இதன் போது முற்பணமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 200 கோடி ரூபாய்க்கு என்ன ஆனது என்று எதுவும் தெரியாது எனவும், நிதி வழஙக்கப்பட்ட நிறுவனமும் காணாமல் போய் விட்டதாகவும் மைத்ரி மேலம் விளக்கமளித்துள்ளார்.
இதன் பின்னணியில் மக்கள் பணத்திலேயே நிர்மாணத்தை நிறைவு செய்திருப்பதாகவும், இன்றும் நிர்மாணப் பணிகள் முழுமை பெறவில்லையாயினும் வருடாந்தம் வட்டி செலுத்த வேண்டியுள்ள நிலையிலேயே நிறைவுற்ற பகுதிகளை தற்போது திறந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment