தாமரைக் கோபுர நிர்மாணத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள 200 கோடி ரூபா ஊழலை விசாரிக்கக் கோரும் ஜே.விபி, தொலைத் தொடர்பு ஆணைக்குழுவை கோப் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளத.
தலா 2,500 ரூபா விகிதம் 8 லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி உதவியாக வழங்கக் கூடிய தொகையை இவ்வாறு முறைகேடாக கையகப்படுத்தியுள்ளதை புறக்கணிக்க முடியாது எனவும் இவ்விவகாரத்தை முற்படுத்தி உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
200 கோடி ரூபா முற்பணமாகப் பெற்ற நிறுவனம் மாயமாகி விட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள அதேவேளை, அந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதாக அப்போதைய தொலைத் தொடர்பு ஆணைக்குழு தலைவர் அனுஷ பல்பிட்ட மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment