நல்லாட்சி அமைக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒத்துழைப்பில்லாததால் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்க முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே.
எனினும், நவம்பர் 16ம் திகதி ஆட்சி மாறியதும் மறு நாளே பல வழக்குகளில் சிக்கியும் தண்டனை பெறாமல் தப்பி வரும் கோட்டாவுக்கு சிறைச்சாலை ஜம்பர் அணிவிக்கப்படும் என சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் வைத்து ஹேஷ தெரிவித்த்துள்ளார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் நடைபெற வேண்டும் என இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment