கல்முனை வெஸ்லி 136 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 September 2019

கல்முனை வெஸ்லி 136 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு


அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை (11) காலை 9:30  மணி அளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கல்லூரி முதல்வர் வி. பிரபாகரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.



திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் கிழக்கு மாகாண  பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எஸ். நவனீீதன் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், வடக்கு கிழக்கு மாகாண மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் வண .எஸ்.எஸ். ரெறன்ஸ், கல்முனை மெதடிஸ் தேவாலய எஸ்.டி,வினோத் , சர்வமத தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பழய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்,என பலரும்  கலந்துகொண்டனர்

136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்லூரி தின விழாவில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்கள், மாகாணமட்ட போட்டிகளில் சாதித்த மாணவர்கள் என பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவிகளின் பரதநாட்டிய நடனங்களும், விசேட தேவையுடைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

-நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment