நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேச மக்களுக்கு 10,000 வீடுகள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 September 2019

நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேச மக்களுக்கு 10,000 வீடுகள்


நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேச மக்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அதற்காக குறித்த பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தமானது இன்றைய தினம் (10) பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. 



இத் திட்டத்தின் கீழ் 10,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன், முதலாவது கட்டத்தில் 400 வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவை களுத்தரை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும். ஒரு வீட்டினது பெறுமதி ரூபா 1.28 மில்லியனாகும்.

குறித்த வீடமைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் ஒப்பந்த நிறுவனமான யப்கா நிறுவனத்தின் சார்பில் இமாஷி ராமனாயக்க ஆகியோர் கையொப்பமிடுவதைப் படத்தில் காணலாம்.

-கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment