கூட்டணி அமைந்தாலும் வேட்பாளர் UNP தான்: அகில - sonakar.com

Post Top Ad

Saturday, 17 August 2019

கூட்டணி அமைந்தாலும் வேட்பாளர் UNP தான்: அகில



ஜனநாயக தேசிய முன்னணியெனும் பேரில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ள போதிலும் வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் தான் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.



இன்று கூட்டணி கட்சிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை தான் போட்டியிடப் போவது உறுதியென சஜித் பிரேமதாச தெரிவிக்கிறார்.

தேர்தலை வெல்லக்கூடிய வேட்பாளர் ஒருவரை கட்சி அடையாளம் கண்டிருப்பதாகவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment