ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை கட்சிக்காரர்கள் அது பற்றி பேசக்கூடாது என அக்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சஜித் பிரேமதாச தன்னை வேட்பாளராக முன் நிறுத்தும் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிக்கும் வரை வேட்பாளர் யார் என்ற கருத்து வெளியிடுவதை தவிர்க்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி மட்டத்தில் கரு ஜயசூரியவுக்கு ஆதரவு பெருகியுள்ள அதேவேளை சஜித் பிரேமதாக இம்முறை வாய்ப்பைத் தவற விடக்கூடாது என காய் நகர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment