தமது வேட்பாளரைத் தாமே தோற்கடிக்க முனையும் UNP - sonakar.com

Post Top Ad

Sunday, 4 August 2019

தமது வேட்பாளரைத் தாமே தோற்கடிக்க முனையும் UNP

 

ஒரு காலத்தில் இந்த நாட்டிலுலுள்ள மிகப் பெரிய கட்சி என்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தது. பிற்காலத்தில் வந்த சுதந்திரக் கட்சி பதவிக்கு வந்த காலப்பகுதிகளில் கூட்டணிகள் சமைத்தே அதிகாரத்தைக் கைப்பற்றியது.


இப்போது நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெரிய வாக்கு வங்கியை; வைத்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஒரு வங்குரோத்துக் கட்சி என்ற நிலையில் நிற்கின்றது. சிறுபான்மைக் கட்சிகளின் பக்கதுணை இல்லாவிட்டால் இந்தக் கட்சிக்கு வாழ்வே கிடையாது என்ற நிலை. அவர்களுக்கு கிடைக்கின்ற பெரும்பான்மை வாக்குகள் சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான.

தற்போது இந்த அரசின் உயிர் கூட்டணியின் கையில் இருக்கின்றது. ஆனால் கூட்டணியை ஆதரிக்கின்ற தமிழ் மக்களுக்கோ முஸ்லிம் சமூகத்திற்கோ இந்த அரசால் ஆகியது ஒன்றும் கிடையாது. வெறும் வாக்குறுதிகளும் உத்தரவாதங்களும் மட்டுமே அவ்வப்போது கொடுக்கப்படுகின்றது. அவற்றைத்தான் அந்தத் தலைவர்கள் இப்போது சந்தைப்படுத்தி வருகின்றார்கள்.

இந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெடுநாள்  தலைமைத்துவம் கொடுத்தவர் என்ற பெறுமை ரணிலுக்குத் தற்போது கிடைத்திருக்கின்றது. அவர் காலத்தில் தான் இந்தக் கட்சிக்கு மரண அடிகளும் விழுந்திருக்கின்றன. தனது தலைமைபைப் பாதுகாத்துக் கொள்ள ஆளும் தரப்பு மஹிந்த ராஜபக்ஸாக்களின் உதவியை இவர் பகிரங்கமாகக் கோரி இருந்ததும் இந்தக் கட்சி வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வேடிக்கை. 

உலக வரலாற்றில் இப்படியான நிகழ்வுகள் அரிதாகவே நடக்கக் கூடியது. ஒரு காலத்தில் மிஸ்டர் கிளின் என்றும் சிலர் இவரை அழைத்தார்கள். இன்னும் சிலர் மிகச் சிறந்த அரசியல் ராஜதந்திரி என்றெல்லாம் இவரை சொல்லிக் கொள்கின்றார்கள். என்றைக்குமே எமது பார்வைக்கு ரணில் அப்படியான மனிதராக ஒரு போதும் தெரிந்ததில்லை. 

கட்சியில் எவ்வளவோ சிரேஸ்டமானவர்கள் திறமையான இளவயத்துக்காரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு ஜே.ஆர். ஜெயவர்தன தனது மருமகன் ரணிலை தமது குடும்ப அரசியல்வாதியாக வளர்த்து இன்று ரணில் இந்த இடத்திற்கு வரக் காரணமாக இருந்தார். அதே போன்று தனக்குப் பின்னர் ருவன் விஜேவர்தன என்பவரை தமது வாரிசாக கட்சியில் வளர்த்தெடுக்க அவருக்கு பல முக்கிய பதவிகளை ரணில் கொடுத்துப் பார்த்ததார். அவரும் எடுபடவில்லை என்ற நிலை.

இப்போது கட்சியின் தனக்கு வேண்டியவர்களை அதிக எண்ணிக்கையில் நியமித்துக் கொண்டு அந்தப் பலத்தில் கட்சியின் அதிகாரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை ரணில் நெடுங்காலமாக செய்து வந்தார். அத்துடன் தனக்கு சாதகமான நிலையைக் கட்சியில் வைத்துக் கொள்வதற்காக ரவி, அகில, சகல போன்றவர்களை வைத்துக் காய் நகர்த்திக் கொண்டிருந்தார். இந்த நரித் தந்திரங்கள் எல்லாம் என்றும் விலைபோக மாட்டாது என்ற நிலையில் தற்போது சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

அந்த உண்மைச் சம்பவங்கள் மக்கள் காதுகளில் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று ஊடகங்களைக் கூட விலைக்க வாங்கி தமக்கு ஏற்றவாறு செய்திகளை அவை சொல்ல வைப்பதிலும் இந்த நேரம் வரை ரணில் தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த எல்லாத் தடைகளையும் தண்டி ஐக்கிய தேசியக் கட்சியில்  அந்தரங்கத்தில் என்ன நடக்கின்றது, நடந்தது என்ற தகவல் எமக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. அவற்றைப் பொறுப்புடன் இங்கு நாம் பதிகின்றோம்.

ஐந்தம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பேரில் நடக்கின்ற கூட்டம் தொடர்பாகவும் அதற்கு முன்னர் இது பற்றி ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்குழு அரலியகஹ மந்திரவில் நடந்த கூட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை நாம் இப்போது அம்பலத்துக்குக் கொண்வருகின்றோம்.

இந்தக் கூட்டத்தை நடாத்துவதற்கு முன்னர் ரணில் விசுவாசிகள் பல இரகசிய சந்திப்புக்களை வௌ;வேறு இடங்களில் நடாத்தி இருந்தார்கள். அந்த சந்திப்புக்களில் மிகவும் விசுவாசமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டு  நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றி கையாட்களுக்கு முன்பே சில அறிவிப்புக்கள் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டடிருந்தது.

ரணில் விசுவாசிகள் எந்த நிலையிலும் தலைவர் முடிவுகளில் இருந்து பின்வாங்கக் கூடாது உறுப்பினர்களுக்கு அதிகம் கதைப்பதற்கு வாய்புக் கொடுக்கக் கூடாது இது விடயத்தில் தலைவர் கடும் இருக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் அங்கு என்ன நடந்தது என்ன?

திட்டமிட்டபடி பிரதமர் ரணில் தலைமையில் அவரது உத்தியோக பூர்வவாசஸ்தளத்தில் நடந்தது.
ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பெயரில் வருகின்ற தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கான சந்திப்பாக இது இருந்தது.

இந்தக் கூட்மைப்பு தொடர்பான வரைபுகளை அங்கத்தவர்களின் கண்ணில் காட்டது அதற்கு அங்கத்தவர்களின் ஆதரவு கோரப்பட்ட போது கூட்டத்தில் பெரும் குழப்ப நிலை தோன்றியது. இது தெளிவாக ரணில் - சஜித் ஆதரவாளர்களுக்கிடையே நடந்த கட்சியின் ஆதிக்கப் போட்டி தொடர்பான பகிரங்க மோதல் என்றுதான் நாம் இதனை அடையாளப்படுத்த விரும்புக்கின்றோம் 

இதற்கு முன்னர் கட்சியில் ரணில் - சஜித் என்று அணிகள் இருந்தாலும் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் இப்படி பெரும் அமளிதுமளி ஏற்பட்டது இதுதான் முதற்தடவையாக இருக்க வேண்டும். இதிலுள்ள வேடிக்கை என்ன வென்றால் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் இருந்த பலர் ரணிலின் கையாட்கள் அவர்கள் கூட ரணிலை எதிர்த்து அங்கு நடந்து கொண்டது ரணிலுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ரணிலின் திட்டத்துக்கு ஆதரவாக 35 எதிராக 7 பேரும் மட்டுமே வாக்களித்தார்கள் என்று அனேகமான ஊடகங்களும் தொலைக் காட்சிகளும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அதற்கு அதரவு தெரிவித்தது 12பேர் மட்டுமே. ரவி, அகில, நவின், ஜோன், சுவாமி, வஜிர, மாரப்பன, சிரினால், காவிந்த, போன்றவர்கள் அடங்குகின்றார்கள் இதில் பலர் அரை குறையாக கைகளை உயர்த்திக் கொண்டு இந்த ஆதிக்கப் போட்டிலில் யார் ஜெயிக்கப்போகின்றார்கள் என்ற நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

பகிரங்கமாக ரணிலின் திட்டத்iதை எதிர்த்தவர்களில் மங்கள, தலதா, கபீர், மலிக், எரான், கமகே, ஹர்ஷ. இம்டியாஸ், ஜயவிக்கிரம, சந்ராணி, வெத ஆரச்சி, அஜீத் பெரேரா, சஜீவ, என்போர் அடங்குகின்றார்கள். இவர்கள் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் தமது கட்சி வேட்பாளர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் கருத்துக்களை முன்வைத்தனர்.

ஒரு கட்த்தில் ரணில் அஜித் பெரேராவுக்கும், சுஜீவ சேரசிங்ஹவுக்கும் வீதியில் இருக்கின்ற கடையர்களைப்போல் இங்கு நடந்து கொள்ள வேண்டாம் என்று அங்கு எச்சரித்தார். தனது திட்டத்துக்கு ஆதரவு கோருவதுடன் மட்டும் இந்த விடயத்தை முடித்துக் கொள்வது என்று வந்த ரணிலுக்கு இது பற்றி விளங்கங்களை சபைக்கு முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது இந்தக் கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு நீண்ட விளக்கை அங்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த எரான் பிரதமரே எமது கட்சி ஒரு ஜனாநாயக் கட்சி அதனால் இங்கு நடக்கின்ற எல்லா விடயங்களும் ஜனநாயக் தன்மையுடடையாதக இருக்க வேண்டும். இதனைப் பற்றி நான் உங்களுக்கு புதிதாக ஒன்றும் சொல்லித்தரத் தேவையில்லை இதனை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

இப்போதுதான் நீங்கள் இந்தக கூட்டமைப்புப் பற்றி அறிவித்து இப்போதே அதற்கு ஆதரவு கோருகின்றீர்கள் இதனை எப்படிச் செய்ய முடியும்? இது நியாயமற்ற ஒரு நடவடிக்கை. பாராளுமன்றத்தில் கூட ஒரு மசோதவைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அதனைப் பல நாட்களுக்கு முன்கூட்டியே தந்து விடுவார்கள் அதற்குப் பின்னர் பலரின் உதவிகளைப் பெற்று நாம் அதனை ஆராய்ந்த பின்னரே அது பற்றிக் கருத்துக்களை முன்வைப்போம். 

இதற்கு இப்போதே ஆதரவு தருங்கள் என்று கோருவது நியாயமில்லை இது பற்றி ஆராய எங்களுக்கு காலம் வேண்டும் எரான் விக்கிரமரத்ன கோரிய போது அதனை ரணில் கண்டு கொள்ளவேயில்லை. எரான் அங்கு பேசிக் கொண்டிருந்த போது ரணில் தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இல்லலை இல்லை நான் இது பற்றி முன்பே சொல்லி இருந்தேன் என்று ரணில் வாதம் புரிந்தார்.  அப்படி முடியாது எங்களுக்குக் காலம் வேண்டும் என்று சுஜீவ, அஜீத் பெரோரா கேட்ட போது கடையர்கள் மாதிரி இங்கு நடந்து கொள்ளாதீர்கள் என்று ரணில் மீண்டும். அவர்களை எச்சரித்தார். 

அப்போது ருவன் விஜேவர்தனவும் இதற்கான காலத்தைக் கொடுப்பதுதான் நல்லது என்று பேசியபோதுதான் ரணில் சற்று மௌனமானர். அப்போது அது வரை மறைத்து வைக்கப்பட்டிருந்து கூட்டமைப்பு யாப்பை வினியோகிக்குமாறு ரணில் அங்கிருந்த ஒருவருக்கு சைகை காட்டியபோது அது அங்கத்தவர்களுக்கு பகிரப்பட்டது.

சரி சரி ஓரிருதினங்களுக்குள் திருத்தங்கள் இருந்தால் தாருங்கள் என்று ரணில் அங்கு பல்டியடித்ததுடன் ஓரளவுக்கு மென்போக்குடன் நடந்து கொண்டார். நாம் இது பற்றி சிரி கொத்தாவில் பேசி இருக்கின்றோம். இப்போது கூட்டமைப்பு முகவரியாக சத்துர சேனநாயக்காவின் வீட்டு இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. 

கூட்டமைப்பைத் துவங்கியவர்கள் பெயரில் ராஜிதவுடைய பெயரும் இருக்கின்றது அவருடைய மகன் சத்துரவின் பெயரும் இருக்கின்றது. கட்சித் தலைவர்களாக தந்தையும் இருக்கின்றார் மகனும் இருக்கின்றார். புதிய கூட்டமைப்பின் முகவரிகூட சத்துரவின் வீடாக இருக்கின்றது. என்பதனை எரான் விக்கிரமரத்ன அங்கு சுட்டிக்காட்டிய போது அங்கத்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தக் கொண்டார்கள்.

எரானுக்குப் பிரதமர் பதலளிக்க முன்னர் அங்கு எழுந்து நின்ற அஜீத் பெரோரா நாங்கள் சஜிதை எங்களது வேட்பாளராகப் பிரேரிக்கின்றோம் என்றபோது அங்கு சஜித் ஆதரவாளர்கள் கரகோசம் செய்தனர்.

இதற்குப் பதில் கொடுத்த ரணில் இன்று அதிகமான உறுப்பினர்கள் வருகை தரவில்லை எனவே இப்போது வேட்பாளர்கள் பற்றிப்பேசுவது பெருத்தமில்லை என்று கூறினார். அப்படியானால் முக்கியமான கூட்டமைப்பு பற்றிய யாப்பிற்கு இப்போது உடனடியாக நீங்கள் அங்கிகாரம் கோருவது நியாயமா என்று எவரும் அங்கு கேள்ளி எழுப்பாது நின்றது ஏனோ தெரியவில்லை. தனக்கு சாதகமாக இருந்தால் முடிவு உடன் வேண்டும் இல்லாவிட்டால் அதனைப் பின்னர் பார்க்கலாம் என்பது ரணிலின் வழக்கமான விளையாட்டு. இதுவரை இந்தக் கட்சி அந்த விளையாட்டை தொர்ந்து ரசித்துக் கொண்டே வந்திருப்பது ஏனோ தெரியாது.

ரணிலைத் தொடந்து அங்கு பேசிய இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் இங்கு இருக்கின்ற எவரும் அடுத்த தேர்தலில் எதிர்க் கட்சியில் பாராளுமன்றத்தில் அமரவிரும்ப மாட்டார்கள் அவர்கள் ஆளும் கட்சியில் இருக்கவே விரும்புகின்றார்கள். எனவே நாங்கள் வெற்றிபெறக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும். இப்போது எமது கட்சியில் இதற்குப் பொறுத்தமானவர்கள் என்று பார்க்கும் போது பிரதமராகிய நீங்களும், கருவும், சஜீதும்தான் இருக்கின்றீர்கள். 

இங்கு சண்டைபிடித்துக் கொள்வதோ குழுக்களாக பிளவுபட்டுக் கொள்வதும் சற்றும் பொறுத்தமான விடயம் அல்ல நீங்கள் மூவரும் ஒரு அறைக்குப்போய் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எங்கள் முன் இவர்தான் வேட்பாளர் என்று சொல்ல முடியுமாக இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும். இங்குள்ள எல்லோரும் அந்த முடிவை ஏற்றுக் கொள்வார்கள் இந்த வேட்பாளரை அறிவிக்கின்ற விடயத்தில் இன்னும் தாமதம் காட்ட வேண்டாம் என்று ரணிலிடம் கேட்டுக் கொண்டார்.

இதனை நாங்கள் வரும் 5ம் திகதிக்கு முன்னர்தான் பேசி இருக்க வேண்டும். இதனை இப்போது உடன் செய்ய முடியாது. இப்போது 5ம் திகதிய ஏற்பாடுகளை ஒரு போது மாற்ற முடியாது. அத்துடன் இப்போது இதற்கான பேஸ்டர்கள் கூட அச்சாவிட்டது இப்போது ஒன்றும் பண்ண முடியாது அனைத்து ஏற்பாடுகளும் முற்றப் பெற்றுவிட்டது என்று கூறினார் ரணில். யார் போஸ்டர்களை அடிக்கச் சொன்னது.? 

சிலர் ரஜிதான் இந்த வேலையைப் பார்த்தது என்று அங்கு சத்தமிட்டபோது இல்லை! இல்லை!  நான் சொல்லித்தான் அவர் இந்த வேலையைச் செய்தார் என்றார் ரணில் அங்கு. 5ம்திகதி ஏற்பாட்டை பின் தள்ளிப்போட்டால் கோதாவுக்குத்தான்  அது வாய்ப்பாக அமையும் என்றார் ரணில்.

நாங்கள் உங்கள் கூட்டமைப்புக்கு எதிரனவர்கள் அல்ல. அது நல்லதொரு வேலை. நாம் முதலில் எமது ஐ.தே.க. வேட்பாளரை அறிவிக்க வேண்டும். என்றார் மங்கள. அப்போது சரத் பொன்சேக்க மங்கள அமைச்சர் அவர்களே ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளால் மட்டும் எம்மால் வெற்றி பெற முடியாது. எனவே நாங்கள் வேட்பாளர் விடயத்தில் தனித்துத் தீர்மானம் எடுப்பது பொறுத்தமில்லை எமக்கு ஆதரவு கொடுக்கின்ற கட்சிக்காரர்களிடமும் நாம் இது பற்றிக் கேட்க வேண்டும் என்றார். அதற்கு யாரும் சாதகமாக பேசமுன்வரவில்லை.

இதுவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் ரணிலுக்கு இந்த நிலை ஏற்படவில்லை. பிரதமர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் இந்தத் தேர்தலில் நாம் தோற்றுப்போனால் எமது சடலங்களைத்தான் நீங்கள் பார்க்க வேண்டி வரும் அந்தளவுக்கு மஹிந்த தரப்பினர் எங்களுடன் வைராக்கியத்தில் இருக்கினறார்கள்;. எனவே வெற்றி பெறக்கூடிய ஒருவரைக் களத்தில் இறக்க வேண்டும் மக்கள் கேட்கின்ற ஒருவரைத்தான் நாங்கள் வேட்பாளராக்க கொண்டுவர வேண்டும் என்று திலிப் வெதஆரச்சி அங்கு குறிப்பிட்டார்.

ரணில் அதனை எல்லாம் கண்டு கொள்ளவில்லை 5ம் திகதி கூட்டணியை அமைத்துத்தான் ஆக வேண்டும் என்று அவர் அங்கு கேட்டுக் கொண்டதுடன் ஆதரவானவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். அப்போது 12 பேர் மட்டுமே அங்கு கையை உயர்த்தினார்கள்.

இது வரை அமைதியாக இருந்த சஜித் உங்களுக்கு என்னிடத்தில் அனைத்து மரியாதைகளும் மதிப்பும் இருக்கின்றது. இந்த இடத்தில் கட்சியில் பிளவுகளை ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்ள வேண்டாம். வாக்கெடுப்புகளை நடத்த வேண்டாம். இதற்கு முன்னர் இப்படி எல்லாம் இந்தக் கட்சியில் நடந்ததில்லை. இந்த இடத்தில் நாம் பேசி ஒரு தீர்மனாதிததை எடுப்போம்.

வருகின்ற 11ம் திகதி எதிரணியினர் தங்களது வேட்பாளரை அறிவிக்க இருக்கின்றார்கள் அதற்குப் பின்னர் நாங்கள் எமது வேட்பாளர் பற்றி அறிவிப்போம் இப்போது 5ம்திகதி கூட்டமைப்பு அமைக்கின்ற வேலையை நிறுத்துங்கள் ஒரு சிறிய இடத்தில் இதனை நடத்ததாமல் வரலாறுகானாத கூட்டத்தை அழைத்து காலி முகத்திடலில் இந்தக் கூட்டணி அமைக்கின்ற வேலையையும் வேட்பாளரை அறிவிக்கின்ற வேலையையும் நாம் ஒன்றாகச் செய்வோம். 

தயவு செய்து இதனை சற்றுக் காது கொடுத்துக்கேளுங்கள் என்று அவர் அங்கு உருக்கமாகப் பேசினார். அப்படியாக இருந்தால் நான் இந்தக் கூட்டமைப்பின் செயலாளர் பதவியையும் அதற்கு மேல் எதாவது பொறுப்பான பதவிகளையும் தந்தாலும் அதனையும் ஏற்கத் தயாராக இருக்கின்றேன் என்று சஜித் பேசிய போது அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது.

அற்குப் பின்னர் அங்கு பேசிய சிரேஸ்ட உறுப்பினர் ஜயவிக்கிரம பெரேரா சஜித் பெருமதி மிக்க ஒரு உரையை ஆற்றி இருக்கின்றார் அந்த உரையுடன் தானும் பூரனமாக இணைந்து கொள்வதாகவும் கூட்டணியின் செயலாளர் பதவிக்கு  தான் அவரை பிரேரிப்தாகவும் அங்கு குறிப்பிட்டார்.

அப்படியான திருத்தங்கள் இருப்பின் ஒரேநாளில் தாருங்கள் என்று ரணில் அங்கு குறிப்பிட்டார். கட்சியில் தொடர்ந்து எந்த நாளும் இருந்தவர்களுக்கு இப்போது  சிறிய தாயின் கவனிப்புத்தான் கிடைத்து வருகின்றது. சஜித்துக்கு வேட்டபாரைக் கொடுக்காமல் தடுப்பதற்கு  மஹிந்தவுடன் டீல் போட்டவர்கள்தான் இந்த கூட்டணி அமைக்கின்ற சதியின் பின்னணியில் இருக்கின்றார்கள் இது மாபெரும் துரோகச் செயல் என்று அமைச்சர் ஒருவர் அங்கு கூறினார்.

அதன் பின்னர் அவசர அவசரமாக திருத்தங்களைச் செய்து கொண்டு வியாழன் இரவு 10 மணி அளவில் ஜயவிக்ரம பெரேரா, கபீர், மற்றும் மலிக் ஆகியோர் பிரதமர் ரணிலைச் சந்தித்து தமது திருத்தங்களைக் கையளித்ததுடன் 5ம் திகதி இந்தக் கூட்டடைப்பு வேiலையைச் செய்ய வேண்டாம் என்று ரணிலிடத்தில் கேட்டுக கொண்டனர். கூட்டமைப்பு வேiலைகள் எல்லாம் செய்த முடிந்து விட்டது அது நடந்தே தீரும் என்று அவர்களுக்கு முகத்திற்கே கூறிவிட்டார் ரணில். 

முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஹக்கீம், ரிஷாட், மலையகக் கட்சிகள் எல்லாம் வேட்பாளரை அறிவித்த பின்னர்தான் நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி யோசிப்போம் என்று கூறிவிட்டார்கள். கூட்டணியில் அங்கம் பெறாத தமிழ் தரப்புகளும் வெற்றிபெறக்கூடிய ஒருவரே வேட்பாளராக வர வேண்டும் என்று ரணிலுக்குக் கூறி இருக்கின்றார்கள். 

அப்படியானால் ரணிலில் இந்த கூட்டணி அமைக்கின்ற வேலை யாருடன் நடக்கப் போகின்றது யாருக்க இந்த ஏற்பாடுகள் நடக்கின்றது என்பதனை இந்த ஐக்கிய தேசிக்கட்சிக்காரர்கள் யோசிக்க வேண்டும்.

இந்தக் கூட்த்தில் அமைச்சர்கள் உறுப்பினர்கள் செல்லும்போது வழக்கத்திற்கு மாற்றமாக அவர்களது கையடக்கத் தொலைபேசிகள் பிரதமரின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் கையேற்கப்பட்டது. இதற்கு அவர்கள் விளக்கம் கேட்டபோது இது எமது தீர்மானம் அல்ல மேலிடத்தில் இருந்தது எமக்கு வந்த கட்டளை அதனையே நாங்கள் இங்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று அவர்கள் பதில் கொடுத்திருக்கின்றார்கள் பாதுகாப்புத் தரப்பினர்.

ஒரு சர்வாதிகாரியைத் தொடர்ந்தும் தமது கட்சியின் தலைமைப் பதவியில் வைத்திருக்க இந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் அடிமை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்களா முதுகெலும்பில்லாதவர்களா என்று கேட்கத்தோன்றுகின்றது.

ரணிலின் இந்தக் கூட்டமைப்பிற்கு செயலாளராக ராஜித நியமிக்கப்பட இருந்தார் என்ற தகவலும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இந்த ரணில்-சஜித் போராட்டமும் பிளவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களே தமது வேட்பாளரைத் தோற்கடிக்கின்ற ஒரு நிலை அங்கு இன்று காணப்படுகின்றது.

-நஜீப் பின் கபூர்

No comments:

Post a Comment