மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை சிதறடிக்கும் என ஆரூடம் வெளியிட்டுள்ளார் W.D.J செனவிரத்ன.
கடந்த காலம் முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுத்து ஆட்சி கவிழ்ந்து விடாமல் பாதுகாத்து வந்த ஜே.வி.பிக்கு வேறு ஆதரவு தளம் இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சி வாக்கு வங்கியிலேயே பாதிப்பு ஏற்படும் என செனவிரத்ன மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்திலும் குழப்பம் நிலவுகின்ற நிலையில் அநுர குமாரவுக்கே சூழ்நிலை சாதகமாக உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment