ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி இனியும் தாமதிக்கக் கூடாது என தெரிவிக்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை விரும்பாத தேசிய ஜனநாயக முன்னணி (கூட்டணி) கட்சிகள் தனித்துப் போட்டியிடலாம். ஆயினும், ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளர் அறிவிப்பைத் தாமதப்படுத்தக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவுற்றுள்ள நிலையில் இனியும் தாமதிப்பது அர்த்தமற்றது என மனோ விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment