எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சி பல கூறுகளாகப் பிளவுறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன.
தற்போதைய நிலவரப்படி ரணில், சஜித் மற்றும் பெரமுன ஆதரவு பிரிவுகள் என மூன்று பிரிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஓரிரு வாரங்களுக்குள் இப்பிளவுகள் உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகி வரும் அதேவேளை, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன் தாம் அவசரப்படும் அவசியம் இல்லையென அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment